மனசெல்லாம் 15
( இதுவரை : +2 தேர்வின் முடிவு காண ராதிகா மாற்றும் இலையா செல்கின்றனர் )
ராதிகா : மதிப்பெண் பார் 1000 அதிகமாக தான் வரும் !
இலையா : எனக்கும் அப்படித்தான் என்று தோன்றுகிறது நன்றாக எழுதி இருக்கிறோம்ல !
ராதிகா : என்ன ஒரே கூட்டமா இருக்கு ? [ இணைய பொறுப்பாளரிடம் ] அண்ணா தேர்வு முடிவு பார்த்து சொல்லுங்க !
[ தேர்வு எண் போட்டு முடிவினை அச்சிடாக தந்தார் அந்த பொறுப்பாளர் ]
இலையா : இந்த வாட்டி சரியாவே எந்த ஆசிரியரும் திருத்தல டி பாரு 705 தான் வந்து இருக்கு ? உன்னுடையது எவ்வளவு ?
ராதிகா : ஆமாம் டி சரியாவே திருத்தல நான் 768 தான் நா 1000 மேல வரும்னு பார்த்தான் !
[ இருவரும் வீடு செல்லும் வரை பேச்சு பின்னர் சோகம் காலம் கரைந்தோடின கவலைகள் மாறின மீண்டும் விளையாட்டு தான் ]
[தொலைபேசி தொடர்பு தோன்றியது இலையாவிற்கும் ,ராதிகாவிற்கும்.தெரியாத எண்களிலிருந்து விடுகைகள் வந்தன ராதிகாவிற்கு ]
தெரியாத எண் : ஹாய் ராதிகா என்னை தெரிகிறதா ?
ராதிகா : யார் நீங்கள் ? எனக்கு தெரியவில்லை ?
தெரியாத எண் : உனக்கு என்னை தெரியாது ஆனால் எனக்கு உன்ன நல்லாவே தெரியும் ஒரு முறை உன்னை நான் பார்த்திருக்கிறேன் !
ராதிகா : தெரியாதவரிடம் பேசுவது எனக்கு பிடிக்காது இனி விடுகை அனுப்பாதிருங்கள்.
தெரியாத எண் : எனக்கு உன்னை மிகவும் பிடித்துள்ளது நான் உன்னை காதலிக்கிறேன் உனக்கு சரியா ?
ராதிகா : [ பதில் அனுப்பவில்லை தடுப்பு பதிவில் அந்த எண்தனை போட்டுவிட்டால் ] [ இருந்தும் பல எண்களிலிருந்து விடுகைகள் வர தொடங்கியது ]
புது எண் : ஹாய் என்னை தெரிகிறதா ?
ராதிகா : யார் நீங்கள் ?
புது எண் : நான் சித்தார்த் !
ராதிகா : சித்தார்த் எனக்கு தெரியும் அவர் விடுகை அனுப்ப மாட்டாங்க நீங்க யார் ஏன் பல எண்களிலிருந்து விடுகை அனுப்பி உயிரை எடுக்கிறிங்க ?
புது எண் குரல் அழைப்பு .......
ராதிகா : !!!!!!?????
[ நினைவுகளின் தொடக்கம் ....]