பிடிவாதம்
அவனை மறந்து விடு என்றேன்
உன்னை வேண்டுமானால்
மறந்து விடுகிறேன் என்று
என் பேச்சை கூட கேட்காமல்
பிடிவாதமாய் என்னோடு வாதம் செய்து விட்டு
என் நினைவுகளையும் வதம் செய்துவிட்டு
இறுக்கிப் பிடித்தவாறு நினைத்துக் கொண்டிருக்கிறது
என் இதயம் அவனை மட்டும்......!