என் உயிர்க் காதலே!!!

கண்ணைச் செதுக்கி
கனவைத் தருகிறாய்

இதயத்தை திருடி
நினைவை தருகிறாய்

பூவை பறிக்க
புயலாய் வருகிறாய்

காற்றை கடத்தி
சுவாசம் கொடுக்கிறாய்

பெட்ரோல் ஊற்றி
மரங்கள் வளர்க்கிறாய்

நிலவை திண்று
ஏப்பம் விடுகிறாய்

நதிகளில்
வானவில் தொய்க்கிறாய்

தேரே இன்றி
தேரோட்டம் நடத்துகிறாய்

அழகை சுருட்டி
விழி அடிக்குள் வைக்கிறாய்

மின்கம்பங்களில் விண்ணை
மாட்டி நட்சத்திர விளக்கெறிக்கிறாய்

வாழும் உயிரைக் கொன்று
உயிர்வாழ் என்கிறாய் புன்னகையோடு
என் உயிர்க் காதலே!!!....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (6-May-18, 12:25 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 49

மேலே