தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
------------------------------------------------------------

வீரம் போற்றும்
வீரத்தாயவள்....

முக்கனிப் போல்
முத்தான முத்தமிழழகியவள்....

உயிரும் மெய்யுமாய் , நம்
உயிர்மூச்சோடு கலந்தவள்...

வானமும் கீழிறங்கி
வணங்கி நிற்கும் , புகழுடையவள்...

வனமகளும் மணம்
மயங்கும் மனமுடையவள்....

தாழ்வுமனப்பான்மையை
தகர்த்திட வந்தவள்....

பார் போற்றும் ,
செந்தமிழ் அவள்...

சிலையல்ல அவள்...
அழகிய கலையவள்!!!

குயிலின் இசையும்
தோற்றுவிடும்... தமிழிசைக்கு!!!

பறவைகள் பாட விரும்பும்...
தமிழவளை...

வெறும் மொழியல்ல அவள்...
தாயுமானவள்!!!

வீரத்தையும் ; தன்மானத்தையும்
கற்றுத்தரும் கலையரசி...

நிமிர்ந்து நில்!
தவற்றினை எதிர்த்துக் கேள் !
அன்பிற்கு மதிப்புக்கொடு !
அறிவிற்குச் செவிக்கொடு !
ஏழைகளுக்குக் கைக்கொடு!
இவையனைத்தையும்
எளிமையாய்
நமக்கு கற்றுத்தந்தவள்...

தமிழால் உயிர் வாழ்கிறோம்......
தமிழுக்காக உயிரையும் கொடுப்போம்...

" தமிழ் மொழி...நம் வாழ்வினை
செதுக்க வந்த உளி!!! "

எழுதியவர் : பானுமதி.மா. (9-May-18, 11:16 am)
சேர்த்தது : மதி
பார்வை : 1079

மேலே