நந்தவனப் பூக்கள்
கோவில் நந்தவனமே குடலையில் அழகிய பூக்களை
-------அள்ளிவழங்கும் வள்ளல் விருட்சங்களே !
கோவில் எழில்மிகு பூம்பொழிலே குவிந்த தாமரை
-------இதழ்விரியும் காலைப் பொழுதழகே !
கோவில் கோபுரமே நிமிர்ந்து பார்க்க வைத்தென்னை
-------வணங்க வைத்த சிற்பியின் கலைவண்ணமே !
கோவில் கருவறையே குடலைப் பூக்களை கொண்டு
-------நான்அருச்சிக்கும் இறைவி இணையடி நீழலே !