இப்படிக்கு நான்
முதன் முதலாய்
உனக்கொரு கடிதம் எழுத எண்ணி எடுத்தேன்
சரி தொடங்குவோம் என்றால்
என்னவென்று தொடங்குவது
எந்த பெயரிட்டாலும்
காதலுக்கு அது அடை மொழியாய் தான் உள்ளது
முழு மொழியாய் இல்லை
ஏதாவது எழுதலாம் என்றால்
அது உன் சரிதமாய் உள்ளது
எதை எழுதுவது? எதை விடுவது?
எப்படி எழுதினாலும்
நம் காதலை முழுமையாய் கூற முடியாது
கண்களும் மனமும் பேசியபின்
காகிதத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லாமல்
இன்றும் உறங்கிக்கிறது
எழுதா மொழியாய்
என் கைப்பையில் உனக்கான காதல் கடிதம்