பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் உனக்கு
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இரவென்னும் துணியில் பந்தல் போட்டு
நிலவேனும் வட்டத்தில் இனிப்பப்பம் இட்டு
நட்சத்திரங்களை சேர்த்து தீபம் ஏற்றி
எங்கள் புவியே உனக்கு !!
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இருட்டை கொஞ்சம் அள்ளிவிட்டு
நீல நிறத்தில் அன்பை கொட்டி
பறவைகளை இதமாய் பாட சொல்லி
பூக்களை அழகாய் ஆட சொல்லி
எங்கள் கலையே உனக்கு
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
மழலை மாறா அற்புதமே!!
புதுமைகளை உள்ளடக்கிய குமுதமே!!
பேச்சில் அன்பை தெளிக்கும் அமுதமே!!
பசியையும் பிணியையும் போக்கும் தானமே!!
உலகமே ஏங்கி நிற்கும் தனமே!!
எங்கள் தமிழே உனக்கு
நாங்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....