இதற்கா நாங்கள் ஆசைப்பட்டோம் பாலகுமாரா
காதல்+காமம்
வாழ்க்கை+வார்த்தை
கவித்துவ வீச்சு
வாசிக்கிறவர்களுக்கும்,
யோசிக்கிறவர்களுக்கும்
நடுவு மொழியில்
நடவு செய்தாய்,
பாலகுமாரா.
மூளைகளைவிடவும்
மனங்களை நம்பினாய்.
உன் எழுத்தில்
மனங்களும் நெகிழ்ந்தன
ஆடைகளும் நெகிழ்ந்தன
ஆசைகளும் நெகிழ்ந்தன.
புதிய கதவுகள், சில திறந்தாய்.
புதிய சூத்திரங்கள் சில...
இன்னும் கொஞ்ச காலம்
இருந்திருக்கலாம்.
இதற்குத் தானே
கவலைப்பட்டோம் பாலகுமாரா!