இறைவனின் குழந்தைகள்
அன்று தீண்டப்பாடதோர்...
பின்பு இறைவனின் பிள்ளைகள்....
சுதந்திர இந்தியாவில் பட்டியல் இனத்தார்....
இன்றோ தலித்.
மாற்றங்கள் என்னவோ
பெயரில் மட்டுமே.
மக்கள் மனதில்
மாக்களாய் இன்றும்....
இறைவனின் பிள்ளைகளாய் இருந்தும் அனாதைகளாய்....
எங்கள் தகப்பன் கருவறையில்,
பிள்ளைகள் நாங்கள்
தெருவரையில்.
எங்கள்
தகப்பன் என்றால்
நாங்கள் அல்லவா அவரை பூசிக்கவேண்டும்...
ஆனால் சேவிக்கவே வழி இல்லையே.....
ஆம் இறைவனின் பிள்ளைகளாய் இருந்தும் அனாதைகளாய் இன்றும்....