வயிற்று பசி.....

அனாதையாய் நின்றான்
ஆதரவற்றுப்போய்....
அறிவோடு சிந்தித்தான்
பிச்சையெடுப்பது தவறென......

ஆனாலும் பசி...
மரத்தடியில் அமர்ந்தான்
அருகாமையில் ஓர்
சாமியார் வந்து அமர்ந்தார்
ஞானியான அவர் தனது உணவு பொட்டலத்தை பிரித்து உண்ணத்தொடங்கினார்

அப்போது இவனை பார்த்து பசிக்கிறக்கத்தில்
இருப்பதை உணர்ந்து தனது உணவை உண்ணும்படி சொன்னார்

அதற்கு அவன் பிச்சையெடுத்ததாக இருந்தால் .....இந்த உணவு எனக்கு வேண்டாம் என்றான்...

சாமியாருக்கு கோபம்
பசியில சாகப்போறவனுக்கு
திமிரப்பாரு என்றார்....

தம்பி நான் பரதேசினு பட்டம் பெற்றவன்
பிச்சையெடுத்துத்தான்
உணவு உண்ணவேண்டும் என்பது அந்த ஈசனின் கட்டளை......

நீ இப்ப பசியை முதலில் போக்கு ....பின்பு
உனது பேச்சை பேசு என்றார்....

இல்லை ..இல்லை
நீங்கள் உண்ணுங்கள்
என்றான்.....

அப்படியே பசியில் மயங்கிவிழுந்துவிட்டான்
உடனே அந்த சாமியார் அவனை துக்கிக்கொண்டு
ஆசிரமம் சென்றார் அங்கே தனது குருவிடம் நடந்ததை கூறினார்

உடனே அந்த குரு...
இவன் உழைத்தே வாழ விரும்புகிறான்...

இவனை பசியாத்தவேண்டு
மானால் .....ஒரு விவசாயி வீட்டிற்கு அழைத்துசெல் என்றார்....

அங்கே...அந்த விவசாயி
உழைத்துக்கொண்டிருந்தார் அந்த அழகை ரசித்த சிறுவன் அவர் கொடுத்த உணவை வயிற் நிறைய உண்டான்....பின்பு
சிறு நேரத்தில் உற்சாகமாய் எழுந்து நீங்க உணவு கொடுத்தீர்கள் நன்றி அதன் நன்றிக்காக
உங்களோடு சேர்ந்து நானும் உழைக்கிறேன் என்றான்.....சாமியார்
முழித்தார் ......
என்ன சாமி நான் உங்களிடம் சாப்பிட்டிருந்தால்...
பிச்சையெடுத்து அந்த கடனை அடைக்க எனது சுயகௌரவம் இடம்கொடுக்காது....

அதனால் விவசாயிடம்
உண்டேன் உழைத்து என் கடனை அடைத்துக்கொள்வேன்
என்றான் சிறுவன்....

சாமியார் உடனே கையில் உள்ள திருவோடை வீசிவிட்டு இனி நானும் உழைத்து உண்ணப்போகிறேன் என்று சொல்லி ...அங்கிருந்து நடந்தார்.....

ஆம் உழைத்து உண்ணுவோம் சுயமரியாதையோடு வாழ்வோம்......

நன்றி வணக்கம்....

எழுதியவர் : கவிஞர்.மா.ரமேஷ்பாரதி (16-May-18, 12:00 pm)
சேர்த்தது : poetrameshbharthi
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே