தனிமை
தாயின் கருவறை இருட்டில் தனியாய் இருந்தபோது
உணராத ஒன்று ...
கல்லறையில் உறங்கும் போதும் தெரியாத ஒன்று
சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தும்
மனதில் ஏனோ இந்த சலனம்
கண்களின் ஓரம் கசிந்திடும் கண்ணீரும்
நடை போடும் கால்களும்
தேடிடும் பாசத்தின் பாதையை
எத்தனை மனிதர்கள் இருந்தாலும்
உணர்கிறேன் துரோகத்தின் வலியை
கண்ணில் சிந்தும் கண்ணீற்கு தெரிவதில்லை
அதற்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை என்று
துடித்திடும் இதயத்தால் உணரமுடிவதில்லை
அதன் துடிப்பு யாருக்கும் தெரியாது என்று
ஏங்கிடும் மனதிற்கு புரிவதில்லை
தன் ஏக்கத்திற்கு விடை இல்லை என்று
கஷ்டம் என தெரிந்தும்
அன்போடு ஏற்கிறேன் என்னை நேசித்திடும்
தனிமையை ...

