தாயின் அன்பு

பூமி கூட புண்ணியம் செய்தது
என் மகளின் பாதம் பட!
மலைகளும் மயங்கி விழுந்தன
அவளின் சிரிப்பை கேட்டு!
மயில்கூட வியந்து பார்த்தது
அவள் நடையை நடனம் என்று!
பூக்களும் புன்னகைத்தது
அவள் மூச்சிக்காற்றுப் பட்டதால்
வானம் கூட வாயசைத்தது
அவளின் மழலைப் பேச்சால்!
என் வாழ்வும் நிறைவடைந்தது
அவள் கொடுத்த தந்தை என்னும்
உறவால்!!!