அம்மா

நீ
உயிரையும்
மெய்யையும்
ஒன்று சேர்க்கும்
உயிர்மெய்.
அம்மா
அன்பே கடவுள்
என்பது எதிர்மறை
அன்பே அம்மா
என்பது நேர்மறை
ஏனெனில்
கடவுள் கூட
கைம்மாறு கேட்கிறது
நீ கைம்மாறு
கேட்காமல்
அன்பு காட்டும்
கடவுள்..!

எழுதியவர் : மு.சதீஸ்குமார் (1-Jun-18, 6:28 pm)
சேர்த்தது : amuthamsatheesh
Tanglish : amma
பார்வை : 1462

மேலே