உயிர் சுமந்த மெய்
கருவறையில் இடம் தந்து.
கண் அருகே கனவுகளை சுமந்து.
வழியெங்கும் பயணம் நலம் பெற.
வழித்துணையாய் வழிகாட்டும்.
உயிர் சுமந்த மெய்.
கோபபட்டு வீசினாலும்.
வேதனை தந்திடாது .
இனிக்கும் விதத்தில் சுகம்
தரும் _மனமே
மனதில் சங்கடங்களை புதைத்து.
மகிழ்வை மகிழ்ந்து விற்பனை செய்யும்
மதியே.
தன் பிள்ளையின்
வாடிய முகம் கண்டால்.
தன்னில் உணர்வுகளை அடக்கி வைத்து .
மதி மயக்கும் அழகி.
உயிர்களுக்கு அமுதமாகி.
உலகிற்கு காதல் கொடுக்கும்
வலிமையின் ஊற்றே.
இவள் பணி செய்யும் தேவதையாய்
வாழவே விரும்பிய.
புன்னகையை சிந்தும் தெய்வமே