அப்பா என்னோடு

அப்பா இனிமேல் இல்லங்கிறத இன்னும் ஏத்துக்க முடியல, எங்கப்பா போனீங்க???

ஆறாம் அறிவு உணர்த்திய அற்புத உறவு நீங்க...

பழையசோறோ பிரியாணியோ பங்கிட்டு சாப்பிட வச்சிங்க...

உழைப்புனா என்னானு உங்கள பாத்து கத்துக்கிட்டோம்...

கஷ்டத்துல வாழ்ந்தாலும் காசுபணம் உங்கள மயக்கலப்பா...

சிலநேரம் திட்டிக்கிட்டே சமைச்சாலும் எங்கள வயிறார வச்சிங்க...

துரோகிகளே வந்தாலும் வெறுத்து நீங்க ஒத்துக்கலையே...

ஆயிரம்பேர் புறம் பேசுனாலும் சண்டை நீங்க போட்டதில்லை...

என் மனசு வலிக்கையில உங்க கண்ணு கலங்கிடுச்சே...

நான் கண்ணீர் வடிக்கையில உங்க இதயம் உடைஞ்சிருச்சே...

நீங்க அதிசயமா ஆஸ்பத்திரிக்கு போனபோதும் மருத்துவமெல்லாம் தோத்துருச்சே...

நீண்டகாலமா சாகணும்னு நீங்க கேட்ட வரத்தை கடவுள் பரிபூரணமா கொடுத்துட்டாரு...

நீங்க இல்லன்னு தெரிஞ்சதும் நிறையா பேரு முகமூடியை கழட்டுறாங்க...

உங்க முன்னாடி வேஷம் போட்டு நின்னவன்லாம் இப்போ நிறம் மாறி நிக்கிறாங்க...

நீங்க கட்டுன கூட்டுல உள்ள எங்கள பாத்து பொறாமையில கருகிற கூட்டம் மொளச்சிருக்கு...

காலம் கொஞ்சம் பாக்கி இருக்கு நம்ம உயர்வ இந்த உலகம் பாக்க...

கடவுள்கிட்ட இருக்கீங்க எங்களுக்காக வேண்டுதல் செய்யுங்கப்பா...

நாள் எனக்கும் வரும்போது நிச்சயம் உங்கள பாக்கணும்ப்பா...

எழுதியவர் : ஜான் (8-Jun-18, 3:08 am)
Tanglish : yennoda appa
பார்வை : 2757

மேலே