அம்மாகிட்ட பேசப்போறேன்

அம்மாகிட்ட பேசப்பாறேன், கடவுளின் உருவத்தைப் பாக்கப்போறேன்...

உசுர உருவ குத்தும் உன் பாசத்த தேடுறேன்ம்மா...

நேரத்துல என்ன சாப்பிட வைக்கும் உன் பரபரப்ப பாக்கணும்மா...

என் புள்ள அழகுன்னு நீ சொல்லும் வர்ணனைய கேக்க ஓடி வரப்போறேம்மா...

அப்பாக்கு தெரியாம என் செலவுக்கு பணம் கொடுக்கணும்னு உனக்கு மட்டும் தோணுச்சம்மா...

காலங்காம இருப்பானு நீ ஒவ்வொரு முறையும் சொல்லனா நான் என்ன ஆகிருப்பனோ...

உனக்கு ஏதுமே புடிக்காதுன்னு, எனக்கு புடிச்சத பார்த்துப்பார்த்து செய்ய நீ மட்டும் தான் இருக்கம்மா...

என் முகநாடிய வச்சே என் நிலைய நீ கணிச்சு ஆறுதல் சொல்லுவம்மா...

என்கூட வச்சு பாத்துக்க கூப்பிட்டபோது, பஸ் ஒத்துக்காது வரமாட்டேன்னு செல்லிட்டம்மா...

நீ கோழியடிச்சு சமைக்கையில அந்த குழம்பு வாசனைக்கு ஈடா ஏதுமே கிடையாதும்மா...

நேசம், பாசம், அன்பு இந்த வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்லவோ, விளங்கிக் கொள்ளவோ உன்ன மட்டும் நெனச்சுக்கிறேம்மா...

எழுதியவர் : ஜான் (9-Jun-18, 2:09 am)
பார்வை : 775

மேலே