அனிதாவின் அண்ணன் ஆதங்கம்

"அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை"

என்ற திருக்குறளுக்கு இணங்க
இக்கவிதை அனிதா கல்வி காற்றை
சுவாசித்து கொண்டிருந்த தருணத்தில்
கல்விக்கு அறமே செய்யாத
தமிழக அரசாங்கத்திற்கும்
அரசியல்வாதிகளுக்கும்
ஓர் அர்ப்பணம்

" படிப்பினிலே பூத்த பூவே
உன் முழு வாசனையை
இவ்வுலகம் நுகரும் முன்
பூமியினுள் புதைந்தாயே
பூவே...!

புரிந்தது எனக்கு
பூமி தாய் உன்னை வெகுவாக அழைத்து
தன் மடியினில் சாய்த்தது
உன் உள் உணர்வை புரிந்துணர
இது சொர்க்கமில்லா
உணர்வில்லா நரகம் பூவே என.....

நீ
உயிருடன் இருக்கையில்
உதவ கரம் நீட்டாத கரங்கள்
அரசாங்கங்கள்
அரசியல் தீவிரவாதிகள்
அனிதா உயிர்
நீத்த பிறகு
நீட் தேர்வை பற்றி
அறிந்தது போலும்
அழுவது போலும் நடிப்பது
எதற்கு.......!
எதற்கடா......!"

இவண்
அனிதாவின்
அண்ணன்
சிவபார்வதி

எழுதியவர் : சிவபார்வதி (31-May-18, 7:43 am)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 799

மேலே