வியாபாரித் தாய்

அதிகாலை 4 மணி, வேலைப்பளு அவளை ஏழுப்பியது. அதிகாலை இருட்டில் மின்சார ஓளி ஏற்ற மறுத்த அவள், நுழைந்ததோ தன் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கைக்களிக்கும் அச்சமயலறையில்.

சமையலறையின் மறுபுறத்தில், முன்தினம் தன்னைச் சார்ந்தோர் உண்ட பாத்திரங்களை மிதக்கக் கண்டால். மின்சார விளக்கின் இயக்கியை இருட்டில் சுவரின் கரையோரம் மெல்ல தேடிக் கண்டு கொண்டால்.

நெல்லின் நிர்வாணத்தை கண்டு மகிழாததால், அவற்றை நீரில் இரவே மூழ்கச் செய்திருக்கிறாள். இயந்திர ஆட்டுக்கல்லை இயக்கும் முன், கதவின் இரு முனையையும் சேர்த்து வைத்து, தன்னைச் சார்ந்தோரை ஒலியும் ஒளியும் அண்டாதவாறு கவனிப்புடன் கவனித்துக் கொண்டால். காலைச் சூரியன் கடிகாரத்தை திருப்ப மணி 6’யை எட்டியது. மெல்ல சென்று பசும் பாலைக் காய்ச்சி, தன் காலை உணவாக பருகிக் கொண்டால். நீர் அருந்திய அந்நெல்லை, அரவை இயந்திரத்தில் இருந்து அல்லி அவளுயரத்தில் சரிபாதி அளவிலான எவர்சில்வர் பாத்திரத்தில் இட்டு, தன் வலப்புறத்தில் மெல்ல கலக்க ஆரம்பித்தால். அங்குள்ள வீடுகளில் ஆவி பறக்க காலை உணவின் தேவைகளை பூர்த்தி செய்ய, மின் விசிறிகளும் இயக்க மறுக்கும் அப்பனி காலத்தில், முகத்தில் வடியும் நீர்த்துளிகளை தன் முந்தானையைக் கொண்டு துடைத்தால்.

தன் துணைவனின் சில்லறை வியாபாரத்தில், தன் பங்காக பத்து வயது மகளின் உயரத்தின் அளவை ஒப்புள்ள அப்பித்தலை அண்டாயை கடை முன் நிறுத்த, காத்திருந்தோர் பட்டியல் முன்னும் பின்னுமாக மெல்ல மோதிக்கொண்டு கூச்சலிட்டனர். தன் குரலை தாழ்த்தி தேவையான அளவுகளை ஒருவர் பின் ஒருவராக கேட்டுக்கொடுக்க, ஒருவர் பின் ஒருவராக மெல்ல நகர்ந்த அக்கூட்டம் ,மிதிவண்டிகளும் நுழையச் சிரமப்படும் அவ்விசால தெருக்களில் நுழைந்து மறைத்தனர். அலுவலக வேலைக்குச் செல்லும் கணவர்களின் வயிற்று பசியை போக்க, அவளின் அக்கலவை உதவுகிறது.

ருசி கண்ட கணவனின் பாராட்டுக்களை தழுவும் பெண்கள் மட்டுமே அறிவர், அவள் அரைத்த அம் மாவின் தனித்துவத்தை. ரூபாய் நோட்டுகளை மட்டும் இவளிடம் கொடுத்து நித்தம் கணவரிடமும், குழந்தையிடமும் இவளால் பாராட்டுகளைப் பரித்த பெண்கள் பலர். கடிகார முள் ஒன்பதை நோக்கி பயணிக்க, அவளின் வீட்டின் முன் -“ லட்சுமி கடையில மாவு தீந்துருச்சு இருபது ரூபாய்க்கு மாவு குடு மா” என்றது ஒருகுரல். அக்குரலை கவனித்த அவள், முன்தினம் அரைத்து குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட அக்கலவையை தன் வளர்ப்புகளுக்காக ஒதுக்கியதை பற்றி விவரிக்க, அப்பெண் கையில் வைத்துள்ள இருபது ரூபாய்க்கு ஏற்ற வேறு பதார்தத்தின் நிழல் படங்களை, தன் மதி முன் நிறுத்த, ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்துச் சென்றால்.

பலரின் ருசியறிந்து பசியாற்றிய இவள், முன்தினம் அரைத்து பதப்படுத்தப்பட்ட அக்கலவையை உணவாக்கி தன் எதிர்காலத்திடம் படைக்க, அப்படையலின் உழைப்பை அறியாத, அவள் வளர்ப்பில் விளைந்த பத்தொன்பது வயது மிக்க வலியவன், சுவையில் குறை கண்டு கூறும் வல்லவன் உணவருந்த மறுத்தான், காரணம் புளிப்பு.

பிறர் வீட்டில் இவள் வாங்கிய விருதுகளை இவள் அறியவும் வாய்ப்பில்லை , தன் வீட்டில் விருத்தளிக்க எவருக்கும் மனம் வரவில்லை. இதுவே, இன்றைய வியாபாரித் தாய்களின் தினசரி நிலைமை.

எழுதியவர் : பாரதி பாண்டியன் (31-May-18, 12:40 pm)
சேர்த்தது : பாரதி பாண்டியன்
பார்வை : 228

மேலே