யார் நீ யார் நீ
யார் நீ? யார் நீ?
யார் நீ என்றே
யாரோ கேட்கவில்லை
யார் நீ யார் என்றே தெரியாமல்
நீ எவன்,
நீ எங்கிருந்தது வந்தாய்,
நீ யாருக்கு என்ன உறவு,
நீ என்ன மொழி பேசுகின்றாய்,
நீ யார் என்றே
யாதும் யோசிக்காமல்
உன்னை பூஜித்த
உன் அடிமையாய்
உளமார இருந்த
உன் புகழுக்கும்
உன் பணத்திற்கும்
உரமிட்டு தரம் உயர்த்திய
உன் ரசிகன் தான் கேட்கின்றன்.
பதிலுண்டா?
நினைத்துப்பார் மகாவல்ல நாயகனே,
மக்கள் என் பக்கம்
மக்கள் நாயகர்கள் நாங்கள் என்றே
மார்தட்டி நின்றோரே,
தெரியுமோ
அந்த 'யார் நீ' யின் வேகம்.
'யார் நீ' ஒன்றும்
யாரோ சொன்ன வார்த்தையல்ல.
அந்த பதின்மூன்று பேரை
தொலைத்துக்கொன்ற
தோட்டாவைவிட
கூர்மையானது.
வேகமானது.
எதோ பேசிவிடலாம்
எதையும் பேசிவிடலாம்
என்ற தான்தோன்றித்தனத்திற்கு
இந்த 'யார் நீ' ஒர்
தொலைத்தெடுக்கும் தோட்டா.