கறை
துப்பாக்கிக் குண்டோ உயிரைக்குடித்தது
தூத்துக்குடியோ தூக்கம் தொலைத்தது.
எப்பாவி மகனடா துக்கம் விதைத்தது
ஏனடா உனக்கு என்ன கிடைத்தது?
அப்பாவி மக்களை அடித்தவன் யாரடா?
அடித்தவன், சுட்டவன் எவனடா செத்தான்?
அப்புறம் எப்படி வன்முறை என்கிறாய்
யாருக்காக மக்களைக் கொல்கிறாய்?
கடற்கரைப் போரிலும் இதைத்தான் சொன்னாய்
காட்டவில்லையே சமூக விரோதியை?
உடற்கறை பட்டால் கழுவிக் கொள்ளலாம்
உயிர்க்கறை பட்டாய் , மானுடம் கெடுத்தாய்