எதார்த்தம்

புதிரான வாழ்க்கை
புதிய புதிய திருப்பங்கள்
புரிந்து வாழ முயற்சித்தே
புரியாமல் வாழ்ந்து வருகிறோம்

அரிய வாய்ப்பை இழக்கும்
போதே முக்கியத்துவம் புரியும்
அரிய நிமிடங்களை இழக்கும்
போதே நேரத்தின் அருமை
புரியும்
அரிய வாழ்க்கை இழந்தால் பெற
வாய்பில்லை
வாழும் போதே வாழுங்கள்
போராட்டம் நிறைந்து
புதிய கண்ணோட்டம் கொண்டு
புத்துணர்ச்சியுடன் வாழுங்கள்....

எதிர்த்து நில்
எதிரிகளை அல்ல
எதிரே நிற்கும்
வாழ்க்கையை
தோல்வியை

எதிர் நீச்சல் கொண்டு
வாழ்வோம்......

தற்கொலை உணர்வை தாண்டி....
விருப்பங்களை தாண்டி....

எழுதியவர் : உமா மணி படைப்பு (1-Jun-18, 2:08 pm)
Tanglish : ethartham
பார்வை : 232

மேலே