ஒரு காதலின் இரு உயிரும்💛

அவள் செவியோடும்
அலைபேசி
என் செவியோடும்
அலைபேசி
இருவரும்
ஒரு வார்த்தை கூட
பேசவில்லை
அன்று ஏனோ எங்களின்
வாய் பேசவில்லை
ஆனால் இணைப்பு மட்டும்
துண்டிக்கப்படவில்லை
ஒரு வித மயான
அமைதியோடு
இணைப்பு துண்டிக்கப்பட்ட
தருணம் இணைக்கப்பட்டது
இரு இதயங்களின்
துடிப்பும் ஒரு காதலின்
இரு உயிரும்.....!!!💛❤

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-Jun-18, 7:51 pm)
பார்வை : 82

மேலே