வாழ்வின் அதிபதி
மலர் மலர்வதும் பின்னர்
உதிர்வதும் இயற்கையின் நியதி
இருக்கும் வரை மணம் தந்தால்
அதை நுகரும் மனதிற்கு ஓர் அமைதி
மனிதன் பிறப்பதும் பின்பு
இறப்பதும் இறைவன் நியதி
வாழும் வரை நலம் செய்தால்
இறை சந்நிதியில் அவன் தான் அதிதி
அஷ்றப் அலி