அடக்கம் ஒரு அஸ்திரம்

அடக்கம் அடங்கிபோகும்
நிலையல்ல
அடக்கியாளும் நிலை
ஆளுமைக்கான முழுமுதல்
தகுதி அடக்கமே

அடங்கிப்போவது
இழிவல்ல
அடங்காமையே இழிவு

அடங்கிப்போவது
கோழைத்தனமல்ல
அதுவும் ஒரு வகையான வீரமே

அனைத்தும் அறிந்தது
அடக்கநிலை அது நிறைகுடம்
அடங்காமை ஒன்றுமே அறியாதது
அது குறைகுடம்

அடக்கம் தேவகணம்
அடங்காமை மிருக கணம்
அடக்கம் வெற்றிவாகை சூடும்
அடங்காமை அழிவு பாதை நாடும்

பதுங்கிப்பாயும் புலிப்போல்
தன்னை அடக்கி ஆளும்
வல்லமை உடையவர் சான்றோர்

ஆபத்தில் தன் ஐயங்கங்களை
உள்ளிழுத்து தன்னை தானே
காக்கும் ஆமை
தக்க சமயத்தில்
தன் ஐம்புலன்களை அடக்கி
தன்னை தானே காப்பது மேன்மை

அடக்கமும் பணிவும்
மனிதனுக்கு இரு கண்கள்
இவை இரண்டும் அல்லாதோர்க்கு
பகலிலும் இருளே...

அடக்கம் மண்ணில்
அடக்கம் செய்தப்பின்பும் வாழும்
அடங்காமை வாழும்போதே
மண்ணில் அடக்கம் செய்துவிடும்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Jun-18, 8:54 am)
பார்வை : 1540

மேலே