புல்லாங்குழல்

மனிதனின் சுவாசம் சுரமாகி நயமாகி
துளைகைகள் மூலம் இசையாகி
மென்மையின் ஸ்பரிசம் ஒன்றாகி
சின்ன சின்ன ஆசையில் பாடல் ஓன்று
மனதினிலே முணுமுணுக்க
புல்லாங்குழலில் அவன் உதடுகள் அழுத்தி நிற்க
பாட்டு ஓன்று இசையோடு கேட்கிறதே
அருமை அருமை கேள்வியின் ஞானம்
தெளிந்து ரசிப்போர்க்கு இதுவே இசையமுதம்,
ஆகா/ பரவசம் படைக்கின்றான் மனிதன்

புல்லாங்குழல் எனும் மூங்கில்தண்டு
நினைத்ததா இது நடக்குமென்று
தானும் ஒரு கலைப் பொருளாகி
மனிதனின் கரங்களில் செல்லப்பிள்ளை போல்
தவழ்ந்திட தவம் கிடைக்கும் என்று
இல்லை இல்லை
இது இறைவன் கொடுத்திட்ட வரம்
புல்லும் பூண்டும் பூக்களும்
படைப்புகள் ஒவ்வொன்றும் பாடுகின்றன
தமக்கேற்ற பண்ணுடன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
உங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
,இறைவன் படைப்பை
எப்படி அணுகுகின்றான் மனிதன்,
எப்படியெல்லாம் அனுபவிக்கின்றான் மனிதன்,
இசையில் மயங்காதோர் மனிதன் இல்லை
இறைபுகழ் பாடாத படைப்புகளும் இல்லை
மனிதன் எல்லாம் தெரிந்தவன்
அணுகும் விதத்தில் அணுகுகின்றான்

இன்னிசையில் பண்பாடும் புல்லாங்குழல்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் இசைக்கும் குழல்
இனிமைக்கும் தனிமைக்கும் இயன்ற குரல்
கனிவுக்கும் கருணைக்கும் ஏற்ற குரல்
பாடுவோம் குழல் எடுத்து பண் இசைத்து
பக்கமெல்லாம் மெச்ச வைப்போம்
புல்லாங்குழல் மெல்லிசை தொடுத்து

எழுதியவர் : பாத்திமாமலர் (6-Jun-18, 12:02 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : pullangulal
பார்வை : 158

மேலே