நான் என்ற அகங்காரம்

இருந்ததும், இருப்பதும்,
நாம் கொண்டுவந்தது அல்ல.

கொடுப்பதும், வாங்குவதும்,
நாம் செய்தது அல்ல.

நம்முடையது என்பது
என்றும் நிரந்தரம் அல்ல.

நமது என்பதே இல்லையென்ற போது,
நான் என்ற அகங்காரம் எங்கே வந்தது?

நான் என்ற தனிமைக்கு
தயவு என்பது காணாத போது,

தர்மம் எங்கே உயர்ந்து நிற்கும்,
உண்மை எங்கே ஒளிர்ந்து நிற்கும்.

எழுதியவர் : arsm1952 (6-Jun-18, 8:25 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 479

மேலே