என் அன்பு தங்கைக்கு

என் அன்பு தங்கைக்கு

என் உடன்பிறவா தங்கையே!!!
என் வாழ்வில் மலர்ந்த மங்கையே!!!

அன்பாய் இருப்பாள்..
அமுதாய் சிரிப்பாள்..

டேய் அண்ணா என்று உரிமையாய்
அழைப்பாள்..

சில நேரம் சுட்டிதனத்தால்
உயிரையும் எடுப்பாள்..

சுமாறாய் சமைப்பாள்..
அது சூப்பர் என்று அவளே உரைப்பாள்..

வெகுளித்தனம் நிறைந்தவள்..
கல்லமில்லா மனமுடைவள்..

பூப்போல் சிரிப்பாள்..
அந்த புன்னகையால் என்னை
ஜெயிப்பாள்..

நான் கோபம் கொண்டால்
ஏக்கமாய் பார்ப்பாள்!!!
அவள் கோபம் கொண்டால்
ஏறிப்போட்டு மிதிப்பாள்!!!

அன்னைபோல் அன்பு காட்டுவாள்..
தந்தை போல் அரவணைப்பாள்..
தோழன் போல் பேசி மகிழ்வாள்..

எனக்கு முதல் குழந்தை அவள்!!!
அவளுக்கு இரண்டாவது அப்பா நான்!!!

நான் விரும்பியதை எல்லாம்
எனக்காக விட்டுக் கொடுப்பவள்..

எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவள்!!!

அவள் என்னை பாசமாய்
பார்க்கும்பொழுது அந்த கதிரவனும்
கரைந்து விடும்...

அவள் அழகை கண்டு அந்த நிலவும்
நிலத்தில் விழுந்து விடும்...

வெறுக்க முடியாத உறவு அவள்..
மறக்க முடியாத மங்கை அவள்..

இலையுதிர் காலத்தின் வசந்தம் அவள்..
இடைவெளியில்லா பந்தம் அவள்..

என் அன்பெனும் உயிர் கவிதையே

நீ என்றும் என் சகோதரியாகவே
இருக்க வேண்டும்...!

இப்படிக்கு
உன் அன்பு அண்ணன்

கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (6-Jun-18, 8:13 pm)
Tanglish : en anbu thangaiku
பார்வை : 7435

மேலே