முரண்பாடு
பேசி பயனில்லை என்று
பேசி பேசி விளக்க நினைக்குறேன் ,
நேர விரயம் குறித்து ,
நீண்ட நெடிய விவாதம் ..
சுற்றுசூழல் மாசு குறைக்க
பிரசாரம்
புகை எழுப்பி ,
புழுதி கிளப்பி ,
வாகனத்தில் .
வின் அதிரும் ஒளி எழுப்பி .
மரங்களின் மகத்துவம்
விளக்கினேன் ...
காகித பிரசுரங்கள்
விநியோகித்து.
மது ஒழிக்க மாநாடு ...
முடிவில் மாநாட்டு திடல் எங்கும்
காலி மதுபுட்டிகள் .
மாபெரும்
உண்ணா விரத போராட்டம்..
பசிக்கு உணவின்றி வாடும்
ஏழைகளோடு ,
பிரியாணி பொட்டலம்
பேரம் பேசி ..
மின் சிக்கனம் குறித்து
கருத்தரங்கம் ...
குளிரூட்டப்பட்ட அறையில்
ஒளிரும் பல மின் விளக்குகளோடு...
ஒரு மணிநேர வேலை அதிகரிப்பை
கண்டித்து மேடை பேச்சு,
இடை விடா பலமணிநேரம் ...