ஹைக்கூ கவிதை

யாருக்கு தெரியும்
நீயும் அழலாம்
என்னை தொலைத்ததற்காய்

விபத்தினை ஏற்படுத்துவது இல்லை
எதிரினில் வருகிற வாகனங்கள்
அருகினில் வருகிற உன் போல்

அனுப்பி வைக்கிறேன்
திருமண அழைப்பிதழ்
வந்து விடாதே

நான்கு பேராய் நான்
என்னை சுமந்தபடி
உன்னுள் புதைக்க

எழுதியவர் : முத்து செல்வன் (8-Jun-18, 4:22 pm)
சேர்த்தது : muthu chelvan
Tanglish : haikkoo kavithai
பார்வை : 118

மேலே