மனத்துக்கெட்டி வாய்க்கெட்டாமல்

மனத்துக்கெட்டி வாய்க்கெட்டாமல்


கவிதை அருகில் அமர்ந்து
காதில் ஒப்பித்துக் களைத்தது.
காகிதப் பஞ்சம்- படபடக்கும் நான்!
ஓவியம் பக்கத்தில் வந்து
படிமம் எடுக்கச் சொல்லத்
தூரிகை உடையத் தவிப்பில் நான்.
கணிப்பொறி சற்றே முன் வந்து
மென்பொருளும் கூடக் கொண்டு
இயக்கச் சொல்லி நிற்கையில்
மின்சாரமற்று அதிர்ச்சியில் நான்.
செல்ஃபோன் கூட நின்று
கிணுத்துக் கிணுத்துக் கூப்பிட
பட்டன் தெரியாத அழுத்தத்தில் நான்.
காதல் சொல்லக் கற்கவேண்டும்
அவள் அருகே இல்லாதபோது.
அப்படியே மனனம் செய்து
ஒப்பித்துவிடும் உரம் வேண்டும்
அவள் அருகே வரும் அந்தக் கணம்.
கைகூடும் காலம் வரை
காகிதம், தூரிகை என்றெல்லாம் நான்
கவிதை படித்துப் போகிறேனே!

எழுதியவர் : திருத்தக்கன் (8-Jun-18, 4:07 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 74

மேலே