திருத்தக்கன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  திருத்தக்கன்
இடம்:  தமிழகம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2018
பார்த்தவர்கள்:  221
புள்ளி:  32

என்னைப் பற்றி...

ஓய்வு பெற்ற நீர்மின்சக்தித் திட்ட ஆலோசகர்

என் படைப்புகள்
திருத்தக்கன் செய்திகள்
திருத்தக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2020 3:14 pm

வீட்டில் இட்டுப் பூட்டியது கோவிட்.
காட்டில் இட்டதோ என இருந்தாள்.
காகிதச் சரசரப்பு காதில் நாராசம்.
முனை ஒடிந்த பென்சில் ஒன்று
முன்னால் இருந்தது உறுத்தல்.
ஆன்லைனில் குடி கொண்டால்
கோவிடாசுரன் கொட்டங்கள்தாம்.
திடீரெனச் சரசரப்பில் ஒரு சங்கீதம்.
பென்சில் கூர் அடையும் நேரம்.
அவள் மனக் கல்லறையில் அங்கு
ஓவியம் ஒன்று உயிர்த்தெழும்
இனிமையான ஒரு ரீங்காரம்.
காகிதம் பென்சிலோடு இணைந்து
அழகாய்ச் செய்தது ஓர் ஓவியம்.
அவள் மனக் கல்லறையும் இன்று
மகப் பேறு அறையாக மறுபிறவி!

மேலும்

திருத்தக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2019 11:54 am

நிலவின் இருட்டில்…

நிலாவில் மோதி நொறுங்குவது
நிசங்களை மிஞ்சிய சாவல்லவா?
நொறுங்காத மிச்சங்கள் ஆயிரம்.
நீண்டுவிட்ட கனவுகளும் ஆயிரம்.
தடுமாறாத, தத்தளிக்காத நேரம்
நீ தந்தது கொஞ்சமில்லையடா.
உன்னைப் படைத்தவருக்கிங்கு
அங்கீகார பானம். விழா மாலை.
உன் வீர மரணத்தில் பிறக்கும்
உன்னத உத்திகள் எத்தனையோ.
கோடி இளமனத்தில் நட்டாய்
குறிக்கோள் வெறிக்கு நாற்று.
வெறிகொண்ட மனங்கள் தீயில்
எரிவாயு மட்டற்றுச் சேர்த்தாய்.
உன் சிதறலில் எத்தனை பாடம்!
சிந்தனை பல கொண்ட தேசம்
உன் சிதறலில் ஒட்டி உறவாட,
உன் மௌனத்தால் இங்கு சிலர்
எண்ணற்ற மொழிகள் கற்கிறார்.
தோல்வியை வெற்றி என்று
தினம் கொண்டாட வகையில்

மேலும்

திருத்தக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2019 11:52 am

நம்பாமல் இருப்பது எப்படி?

எனக்கு நம்பத்தான் தெரியும்.
நீ ஏமாற்றிவிடுவாயென்பதால்
நம்பாமல் இருக்க முடியாது.
ஏமாற்று. மீண்டும் வந்து பார்.
மீண்டும் உன்னை நம்புவேன்.
குப்புறப் படுத்து உறங்குவதே
கால கால வழக்கம் எனது.
நீ முதுகில் குத்திவிடுவாயென
அஞ்சி மல்லாந்து படுப்பதா?

மேலும்

திருத்தக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2019 11:50 am

புலன் விசாரணை!

‘கண்ட இடம் தொடாதே’ என்றாள்.
இந்தத் ‘தடை’யை எழுத்துக் கூட்டி
‘தொடு’ என வரும் நேரம் இன்று.
சொக்க வைக்கும் அபாய மணி.
‘கொல்வேன்’ எனும் உயிர்ப் பந்தம்.
ஊடல் எனும் கூடல் விண்ணப்பம்.
‘காணாத இடம் உண்டே கண்ணே’
என்று தொலைவாய்ப் போனவளைத்
தொடர்ந்தபடி கேட்டான் குறும்பன்.
அவன் நயத்தில் குளிர்ந்துவிட்டாள்.
நயம் புரிந்தவன் நலம் கண்டான்.
நயம் புரிந்தவள் நடை தளர்ந்தாள்.
நினைவு துள்ள உடை தளர்ந்தாள்.
சுகம் கேட்டவன் கையைப் பற்றி,
மோசமானவன் என உதடசைத்து,
ஆசையானவன் எனத் தன் காதில்,
மோசக் காரன் மூச்சோடு கேட்டு,
அவனும் ஆயிரம் வேறு கேட்டு,
பொய்கள் செய்து ஒரு மகிழ்ச்சி.
மெய்களு

மேலும்

திருத்தக்கன் - திருத்தக்கன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2018 3:25 pm

கவிஞனாக ஆயத்தம்

மலட்டுச் சிப்பிகளின் முத்துக் கர்வமாக
அமாவாசை நிலவின் ஆதிக்க ஓளியாக
நிரந்தர சூரிய கிரகணக் கனவிலிருக்கும்
பகலில் ஜொலிக்க ஏங்கும் விண்மீன்களாக
வெண்கலம் மினுக்கும் பொன் கற்பனையாக
விண்கலமெனவெண்ணும் விட்டில் பூச்சியாக
உயிர் கொள்ள ஏங்கும் சுவற்றின் நிழலாக
வேறு எண்ணின்றியே கோடிகள் உருவாக்கக்
கனாக் கண்டு துடிக்கும் தனிப் பூச்சியங்களாக
பருந்துகளுக்கு எட்டாது வளரத் துடிக்கும்
காய்ந்து சிதையவிருக்கும் விதைகளும்
முகத்தல் அளவுகோல் மட்டும் வைத்து
புயல் வேகத்தைக் கணக்கிட்த் துடிப்பவனாக
மயில் பீலிகளை வைத்து மலைக்குள்
குகை அமைக்க ஆர்ப்பாட்டம் செய்பவனாகத்
தமிழ் வளர்த்துக் கவ

மேலும்

மிக்க நன்றி செந்தில்! 16-May-2018 10:30 am
நல்ல கற்பனை சிந்தனை நண்பரே! 15-May-2018 10:30 pm
நன்றி 15-May-2018 4:39 pm
நன்று 15-May-2018 4:07 pm
திருத்தக்கன் - திருத்தக்கன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2018 3:25 pm

கவிஞனாக ஆயத்தம்

மலட்டுச் சிப்பிகளின் முத்துக் கர்வமாக
அமாவாசை நிலவின் ஆதிக்க ஓளியாக
நிரந்தர சூரிய கிரகணக் கனவிலிருக்கும்
பகலில் ஜொலிக்க ஏங்கும் விண்மீன்களாக
வெண்கலம் மினுக்கும் பொன் கற்பனையாக
விண்கலமெனவெண்ணும் விட்டில் பூச்சியாக
உயிர் கொள்ள ஏங்கும் சுவற்றின் நிழலாக
வேறு எண்ணின்றியே கோடிகள் உருவாக்கக்
கனாக் கண்டு துடிக்கும் தனிப் பூச்சியங்களாக
பருந்துகளுக்கு எட்டாது வளரத் துடிக்கும்
காய்ந்து சிதையவிருக்கும் விதைகளும்
முகத்தல் அளவுகோல் மட்டும் வைத்து
புயல் வேகத்தைக் கணக்கிட்த் துடிப்பவனாக
மயில் பீலிகளை வைத்து மலைக்குள்
குகை அமைக்க ஆர்ப்பாட்டம் செய்பவனாகத்
தமிழ் வளர்த்துக் கவ

மேலும்

மிக்க நன்றி செந்தில்! 16-May-2018 10:30 am
நல்ல கற்பனை சிந்தனை நண்பரே! 15-May-2018 10:30 pm
நன்றி 15-May-2018 4:39 pm
நன்று 15-May-2018 4:07 pm
திருத்தக்கன் - திருத்தக்கன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2018 3:26 pm

பட்டியல் திருத்தம்

இந்த உலகில் எனக்குப் பிடித்த
இன்ப சாகசங்கள் எத்தனையோ!
கோடையிலே மழையை நினைவூட்டி
மழையிலே குடையை நினைவூட்டும்
அவள் கூந்தலில் தொடங்க வேண்டும்.
அளவாலே கடலை நினைவூட்டிக்
கனிவாலே கடவுளை நினைவூட்டும்
அவள் காவியக் கண்களில் தொடர்வேன்.
எண்ணத்தில் வந்து மூச்சை நினைவூட்டி
மூச்சு அவளது மணம் நினைவூட்டும்
அவள் நாசி பற்றிப் பேசவேண்டும்.
செல்வத்துள் செல்வம் நினைவூட்டிக்
கவிதை செய்ய எனக்கு நினைவூட்டும்
அவள் செவிபற்றிச் சொல்ல வேண்டும்.
தமிழின் பெருமையை நினைவூட்டி
தமிழுக்கே இனிப்பை நினைவூட்டும்
அவள் இதழிரண்டால் பட்டியல் வளரும்.
இத்தனை கொடுத்த நினைவால்
அத்தனையும் நினைவூட்ட

மேலும்

நன்றி 11-May-2018 4:25 pm
நன்று 11-May-2018 3:57 pm
திருத்தக்கன் - திருத்தக்கன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2018 10:52 am

மீண்டும் உயிரூட்டு

என் சொல் கூட்டத்துக்கன்று
வாக்கிய அந்தஸ்து தந்தாய்!
பேசாமல் பிறகு போய்விட்ட
எனது தமிழ் ஆழமே. அழகே!
இன்று தமிழின் கரையில்
தவிக்கும் மீனாகிவிட்டேனே!
என் காதுக்குத் தேனொலி
அறிமுகப் படுத்திவிட்டு இன்று
உன் விபரீத மௌனத்தால்
அபசுரங்களுக்கு என்னைத்
தத்துக் கொடுத்த சங்கீதமே!
உன் பிராயச்சித்தங்களாலே
என்னைப் பாவங்களின் பலன்
எதுவும் அண்டாமல் காத்தாய்.
எங்கு போனாய் புண்ணியமே!
என் பாவங்களால் தனியாக
இங்கேயே நரகம் அமைந்தது!
இல்லாத ஏதோ தினம் இயற்றி
என் புகழை எங்கும் சொல்லி
பீடத்தில் விட்டுப் போய்விட்ட
பழமையற்ற காவியமே! நான்
இறங்கத் தெரியாமல் விழுந்து
உடைந்து கிடக்

மேலும்

மிக்க நன்றி மாலினி! 09-May-2018 12:31 pm
மிக்க நன்றி இளங்கதிர்! 09-May-2018 12:30 pm
அருமை தோழர் திருத்தக்கன் 08-May-2018 11:17 am
சூப்பர் சூப்பர் 08-May-2018 10:56 am
திருத்தக்கன் - திருத்தக்கன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2018 11:06 am

புலன் மீறியதாய்
(இந்தப் படைப்பு கடவுள் தொடர்பாக எழுதப்பட்டதாகப் புலப்படலாம்.
நான் நாத்திகனும் இல்லை. ஆத்திகனும் இல்லை. எனக்குத் தெரியாது
என்னும் வகை (agnostic க்குத் தமிழ்?). அண்டத்தின் ஆற்றலை வியக்கும்
என் உணர்வாகக் கொள்வது பொருத்தம்).

கண்ணுக்குத் தெரியாத காட்சி
கனவுகளில் ஊடுருவிய கோலம்
தொட்ட போது உணரமுடியாத
திட திரவ ஆவி மீறிய ஒரு நிலை
நாசிக்கு மீறி புதுப் புலன் காட்டும்
நறுமணத்தின் எல்லைமீறிய
சுவாச சம்பந்தம். மூச்சுக்கு பதில்!
செவிச் செல்வம் தலையென்றால்
இது செவிச் செல்வத்துக்குத் தலை.
காது வழி புகுவதறியாது பரவி
காயம் முழுதுணரும் புதுப்பாவால்
குதூகலப் பொழிவு அப்பப்பா!

மேலும்

கடவுள் உண்டென்று நினைத்தால் இது கடவுள் தொடர்பான ஒன்றாகக் கொள்ளலாம். எனக்கு வாழ்க்கையின் சில திருப்பங்களில், இயற்கையின் பேராற்றலை எண்ணும்போது இப்படித் தோன்றியதுண்டு.................. 09-May-2018 12:29 pm
எதை எப்படி புரிஞ்சுக்கிறது 08-May-2018 11:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
மேலே