நம்பாமல் இருப்பது எப்படி
நம்பாமல் இருப்பது எப்படி?
எனக்கு நம்பத்தான் தெரியும்.
நீ ஏமாற்றிவிடுவாயென்பதால்
நம்பாமல் இருக்க முடியாது.
ஏமாற்று. மீண்டும் வந்து பார்.
மீண்டும் உன்னை நம்புவேன்.
குப்புறப் படுத்து உறங்குவதே
கால கால வழக்கம் எனது.
நீ முதுகில் குத்திவிடுவாயென
அஞ்சி மல்லாந்து படுப்பதா?