புலன் விசாரணை

புலன் விசாரணை!

‘கண்ட இடம் தொடாதே’ என்றாள்.
இந்தத் ‘தடை’யை எழுத்துக் கூட்டி
‘தொடு’ என வரும் நேரம் இன்று.
சொக்க வைக்கும் அபாய மணி.
‘கொல்வேன்’ எனும் உயிர்ப் பந்தம்.
ஊடல் எனும் கூடல் விண்ணப்பம்.
‘காணாத இடம் உண்டே கண்ணே’
என்று தொலைவாய்ப் போனவளைத்
தொடர்ந்தபடி கேட்டான் குறும்பன்.
அவன் நயத்தில் குளிர்ந்துவிட்டாள்.
நயம் புரிந்தவன் நலம் கண்டான்.
நயம் புரிந்தவள் நடை தளர்ந்தாள்.
நினைவு துள்ள உடை தளர்ந்தாள்.
சுகம் கேட்டவன் கையைப் பற்றி,
மோசமானவன் என உதடசைத்து,
ஆசையானவன் எனத் தன் காதில்,
மோசக் காரன் மூச்சோடு கேட்டு,
அவனும் ஆயிரம் வேறு கேட்டு,
பொய்கள் செய்து ஒரு மகிழ்ச்சி.
மெய்களுக்கங்கே புது உணர்ச்சி.
புலன்களால் புலன்களில் இனிப்
புலன் விசாரணை பொழுதுக்கும்!

எழுதியவர் : திருத்தக்கன் (24-Sep-19, 11:50 am)
சேர்த்தது : திருத்தக்கன்
Tanglish : piln VISARANAI
பார்வை : 57

மேலே