நீ வானவில்லோ பெண்ணே
சிவந்த உன் முகம்
அதில் ஓடிடும்
பூசிக்குளித்த மஞ்சள் ரேகை
செவ்வாய் இதழ்கள்
மாம்பழ கன்னங்கள்
பச்சை நிற புடவை
ஊதா புடவைத்த தலப்பு
வாரி முடித்த முடியை
கொண்டையாகும்
நீல நிற கொண்டை வலை
இப்படி பல நிறங்களாய்
காட்சி தரும் நீ, பெண்ணே
மண்ணில் பூத்த வானவில்லோ ....