நிலவின் இருட்டில்

நிலவின் இருட்டில்…

நிலாவில் மோதி நொறுங்குவது
நிசங்களை மிஞ்சிய சாவல்லவா?
நொறுங்காத மிச்சங்கள் ஆயிரம்.
நீண்டுவிட்ட கனவுகளும் ஆயிரம்.
தடுமாறாத, தத்தளிக்காத நேரம்
நீ தந்தது கொஞ்சமில்லையடா.
உன்னைப் படைத்தவருக்கிங்கு
அங்கீகார பானம். விழா மாலை.
உன் வீர மரணத்தில் பிறக்கும்
உன்னத உத்திகள் எத்தனையோ.
கோடி இளமனத்தில் நட்டாய்
குறிக்கோள் வெறிக்கு நாற்று.
வெறிகொண்ட மனங்கள் தீயில்
எரிவாயு மட்டற்றுச் சேர்த்தாய்.
உன் சிதறலில் எத்தனை பாடம்!
சிந்தனை பல கொண்ட தேசம்
உன் சிதறலில் ஒட்டி உறவாட,
உன் மௌனத்தால் இங்கு சிலர்
எண்ணற்ற மொழிகள் கற்கிறார்.
தோல்வியை வெற்றி என்று
தினம் கொண்டாட வகையில்லை.
துவண்டு தேங்க நியாயமில்லை.
விக்ரம் உன்னால் இங்கு சிலபல
விக்ரமாதித்தியர் உருவாகிடுவார்.
வேதாளம் இல்லாத உலகம்
வெறுமையாய் இருக்குமன்றோ?

எழுதியவர் : திருத்தக்கன் (24-Sep-19, 11:54 am)
Tanglish : nilavin iruttil
பார்வை : 463

மேலே