எல்லை இல்லா நெல்லை
பாளயங்கோட்டையின் கிழக்கே
தாமிரபரணி ஆற்றின் மேற்கே
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நகரம்
சிலகாலம் பாண்டிய மன்னனின் தலைநகரம்
திருநெல்வேலி எனப் பெயர் பெற்ற நம் நெல்லை நகரம்
திக்கெல்லாம் கல்வியில் புகழ்பெற்ற
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போடு
அருவிகளும் அலசல்களும்
குருவிகளின் கூக்குரலும்
ஆற்றங்கரையின் ஈரமும்
இங்கு உள்ள மூங்கிலில் பிறக்கும் இசையும்
அல்வாவில் உள்ள சுவையும்
என்றென்றும் மக்கள் மனதை கவரும்
அகத்திய மலையில் உற்பத்தியாகும்
தாமிரபரணி பாயும் ஊர்
குற்றால அருவின் தொடர்ச்சி
புனல் பெருகும் பொருநை நதி
உலக பிரசிதி பெற்ற திருக்கோவில் காந்திமதி
உள்ள திருச்சிற்றம்பலம் நம் திருநெல்வேலி
பசுமை நிறைந்த மூங்கில்
பாசம் நிறைத்த மக்கள்
பசியோடு யார் வந்தாலும்
பாய் விரித்து சோறு போடும்
பாகுபாடு இன்றி அனைவரையும் வாழ வைக்கும்
இந்த திருநெல்வேலிக்கு இல்லை ஒரு வேலி
பண்டை காலத்திலே மூங்கில் நெல்லால்
மக்களின் பசியை போக்கிய
இந்த "நெல்லையின் பெருமைக்கு இல்லை எல்லை."
என்றோ நெல்லைக்கு சென்ற தித்திப்பு
மீண்டும் எனக்கு கிடைக்க வேண்டும்
நெல்லையில் ஒரு சந்திப்பு