இளைஞனின் வாழ்க்கை

அனைவரும் செல்லும் பைக்கில் இவனுக்கும் செல்ல ஆசை
ஆனால் வறுமை இவனை நடக்க சொல்கிறது
அனைவரும் படிக்கும் கல்லூரியில் படிக்க ஆசை
ஆனால் வறுமை இவனை வேலைக்கு செல் என்றது
அனைத்து உறவினருடன் மகிழ்ச்சியாக இருக்க ஆசை
ஆனால் உறவினர் பணம் இல்லை போ என்கிறார்கள்
அனைவரையும் போல உயர ஆசை
ஆனால் வறுமையினால் உதவுவதற்கு யாரும் இல்லை
தனியாக நிற்கும் இளைஞனே
நீ தன்னம்பிக்கையோடு தைரியமாக உழைத்தால் முன்னேற்றம் வரும்
கடவுள் துணையோடு உறிதியோடு போராடு
ஒருநாள் உலகம் உன்னை திரும்பிப்பார்க்கும் !!!