குப்பைத்தொட்டி

#கிறுக்கல்15

#தமிழினியன்

#குப்பைத்தொட்டி

உந்தன் காதோடு
குளிர் காற்றாகி
இதழ் பதிக்கிறேன்,

கோடையின் போது
நீ பூசும் உதட்டுச்
சாயத்தில் துளிரும்
பனியாகிறேன்,

விழியுறங்கியும்
வலியோடு
மனம் உறங்காமல்,

உந்தன் எண்ணங்களை
இதயத்தில் சுமக்கிறேன்,

நெடியசுத்தத்தை
மூச்சும் உணர,

விரல் ஏங்கி
அணைக்கிறது
நீ போடும் கழிவுகளையும்,

என்னை குப்பைகளைச்
சுமந்து செல்லும்
தொட்டியாக நினைத்து
விடாதே எப்போதும்!!

நான் வாழும் உலகில்
நீ எந்தன் உயிர் தந்த
உயிர் சுமந்த அன்னை!!

எழுதியவர் : தமிழினியன் (14-Jun-18, 5:22 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 461
மேலே