மன்னித்து விடடி பொய்யாய்
நேர் நின்று விழையுமோ
சுவர்க்கம்...
புதையுண்டு
கிடக்குமோ
உன் மனம்தனில்.....
இடி விழுந்த நெருப்பில்
ருசியாய் வருகிறாய்
இறந்த என் நாவின்
முதல் உப்பாய்....
தசைகள் நெருக்கையில்
சிதைந்துவிடக்கூடும்
எலும்பகள் பொடித்திடுமோ
என அச்சம் கூட....
முதன்முறை
உனை கட்டிதழுவுகையில்...
பெய்திடும் முகை முகில்
சாரலில்
காதல் மட்டுமென்பது
பொய்யே...!
காமமும் சிறகை
விரித்து முத்தாய்
கண்சிமிட்டும்
மெய்யடி பெண்ணே...!
மன்னித்து விடடி
பொய்யாய்
முதன்முறை மட்டுமல்ல...

