ரமலான் பண்டிகை

இராமும் ஜானும்
சேர்ந்து வாங்க
ரமலான் பண்டிகையை
கொண்டாடி மகிழ்வோம்!

நாம் அனைவரும் இங்கே
இந்திய பிள்ளைகள் தாங்க
இந்தியர் என்பதில்
பெருமை கொள்வோம்
இணைந்து இன்னும்
பல சாதனை புரிவோம்!
சாதி மதத்தை துறந்து
மனிதத்தை வளர்ப்போம்
அன்பொளியை ஏற்றி
மன இருளை போக்கி
வாழ்த்துகள் கூறி
உள்ளம் நிறைய
உணவு பரிமாறி
கொடுத்துண்டு மகிழ்வோம்!

அண்ணன் தம்பியாய்
அக்கா தங்கையாய்
உற்றார் உறவினரோடு
அன்பு நண்பர்களோடு
கூட்டுக்குடும்பமாய்
இணைந்து இன்பம் காண்போம்
இந்நாள் போலே
எந்நாளும் நாமே
இணைந்து வாழ்வோமே!
ரம்ஜான் நோன்பை
சிறப்பாய் கொண்டாடி மகிழ்வோம்!

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

எழுதியவர் : கிச்சாபாரதி (15-Jun-18, 9:10 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 853

மேலே