நம்பிக்கைவை
வீழ்வதும் எழுவதும்
சூரியனுக்கு அழகு!
இரவும் பகலும்
வாழ்க்கைக்கு புதுசு
எண்ணமும் செயலும்
வெற்றிக்கு வித்து
நம்பி(க்)கைவை
எல்லாம் உனக்கு தூசு!
மனித அன்புக்கு ஈடாகுமா
வெறும் பணக்காசு?
சாதி மதத்தைத் தூக்கி வீசு
சகமனிதனை எப்போதும் நேசி
நல்லது கெட்டதை பகுத்தறிந்து யோசி...
மன இருளை நீக்கி
உன் வாழ்க்கையை விடிவெள்ளியாக்கு...!