சொர்க்கமும் நரகமும்
சொர்க்கமும் நரகமும் எங்குள்ளது?
உன் உறவிலா? உன் பிரிவிலா?
வாழ்க்கை என்பது யாரிடம் உள்ளது?
என்னிடமா? உன்னிடமா?
என்னருகில் நீ இருந்தவரை
துளி துன்பம் எனக்கில்லை
உன்னை நான் விலகிய பின்னே
கண்டபடி புலம்புகிறேன்
பைத்தியம் போலே!
விட்டுக்கொடுப்பதும் அன்புதான்
தட்டிக்கேட்பதும் அன்புதான்
சந்தேகம் நுழைந்துவிட்டால்...
வாழ்க்கை நரகம்தான்!
மன்னித்து மடி தந்தால்- தினம்
நான் காண்பேன் சொர்க்கம்தான்!