அன்பே மரணமாக வா
அன்பே நான் பேசும்பொழுதெல்லாம் உன் பெயரை தவிர
ஒரு வார்த்தையும் தெரியாமல் மவுனமாகிறேன்
அன்பே நான் பார்க்கும் இடமெல்லாம் உன் உருவம் தான் தெரிகிறது
நான் கண்களை மூடினாலும் அழியாது உன் பிம்பம்
என்னை பைத்தியக்காரனாய் அலையவிடுகிறது
நீ எங்கு சென்றாய் அன்பே
என் பைத்தியத்தை தெளிய வைக்கும் மருந்தாக நீ வர வேண்டும் - இல்லை
என்னை அழிக்கும் மரணமாக நீ வர வேண்டும் - பெண்ணே
நீ மருந்தாக வருவதை விட மரணமாக வந்தால்
எனக்கு மிகுந்த சந்தோஷம் - ஏன் என்றால்
மரணத்தை உன் மடியில் கொடுப்பாயே அதற்காக!!!