வாக்கும் தூக்கும்

விக்கி விக்கி
சாகும் முன்னே
விரைவில் தானே
விழித்து தானே
இணைந்து வாடா
என் தமிழனே!

நீதியும் கூட
நிதிக்கு பின்னே
கைகட்டி இன்று
நிக்குது இங்கு
வாய்மை இனி
வெல்லாது என்று

நீயும்
தப்பு மேலே
தப்பு செஞ்சு
வாழத்தானே
பழகிக்கொள்ளு
நீதி வேண்டி
போராட இணைந்தால்
அதிகாரவர்க்கம்
மக்களைக்கொல்லும்...!
அதற்கு காரணம்
நாம்தான் என்றால்
உண்மைதான்!

காத்திரு தோழா
மக்கள் காலில்
வந்து விழும் காலம்
வெகு தூரமில்லை
அப்ப வந்து
தூக்கு தூக்கு
பொய்வாக்கு செய்த
அயோக்கிய ஓநாய்களை
நாட்டை விட்டே தூக்கு

உன் வாக்கு இல்லாமல்
அவன் எப்படி ஆளுவான்
உங்களது சேவை
எங்களுக்கு தேவை
என்றுதானே
வாய்கூசாமல்
பொய்பேசுவான்...
அவனையெல்லாம் பாவமென்று
நீ நினைத்தால்
உனை தொடர்ந்து
ஏமாற்றத்தான் செய்வான்...
இன்னும் யோசிக்காமல்
வாக்களித்தால்
நீ போட்ட வாக்கு
உனக்குதான் துக்கு
சிந்தித்து தானே
ஓட்டு போடு
நல்லவனப்பார்த்து!

கொலை கொள்ளை செய்யும்
அயோக்கியரை எல்லாம்
வெளியில் துக்கு
உன் தலைவனைவிட
அதிகாரம் மிக்கது
உனது வாக்கு
என்பதை நீயும்
புரிந்து கொள்ளு!

எழுதியவர் : கிச்சாபாரதி (17-Jun-18, 12:14 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : vaakkum tookkum
பார்வை : 73

மேலே