கூட்டலும் கழித்தலும்
அழுக்கான அந்த
டவுன் பஸ்ஸில்
அமளி துமளியோடு நீ
வந்தாலும் அதனை
என் தேவதையின்
ரதமெனவே கருதுவேன்!
கூட்ட நெரிசலினால்
வேர்வை மழையில் நனைந்து
கேசமும் மேக்கப்பும்
கலைந்த பின்னும்
எனக்காக மண்ணுலகம்
வந்த தேவதை இவளேயென
உன்னை நான் காணுவேன்!
மையோடு பொய் சேர்த்து
பூசியிருக்கும்
அவ்விரு விழிகளாலும் நீ
எனை நோக்கவே
அழகாய் இருக்கிறேனா என
மீண்டும் மீண்டும்
ஊர்ஜிதம் செய்து கொண்டு
வெகுநேரமாய் நான்
உன் வரவை எதிர்பார்த்து
எனது இரு சக்கர வாகனத்தில்
நீ வந்திறங்கும் பஸ் ஸ்டாப்பில்
நின்றிருந்தால்
என் வாகனத்தை
எருமையாகவும்
அதன்மீது அமர்ந்திருக்கும்
என்னை எமனாகவும்
கற்பனை செய்யும்
உன் மனம் தெரியுதடி
உன்னுடைய அந்த
கிண்டல் பார்வைகளில்
இருந்தே!