நாலடியார் -------------- உப்பு போட்ட காதல்

நாலடியார் என்ற நூலிலும் காமத்துப் பால் உண்டு.

என் காதலியையை கட்டி அணைக்காவிடில் அவள் உடம்பில் பசலை நிறம் வந்து விடும்.

அதுக்காக எப்ப பார்த்தாலும் கட்டி அணைத்து கொண்டே இருக்க முடியுமா ?

ஊடல் இல்லாத காமம் உப்பில்லாத பண்டம் போல. காதலுக்கு சுவை சேர்பதே ஊடல் தானே.

காதலில் ஊடி, பின் கூடுவது ஒரு சிறந்த technique ஆகும்.

முயங்காகால் பாயும் பசலை மற்று ஊடி
உயன்காக்கால் உப்பு இன்றாம் காமம் - வயங்கு ஓதம்
நில்லா திரை அலைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப
புல்லாப் புலப்பதோர் ஆறு

பொருள்

முயங்காகால் = கட்டி அணைக்க விட்டால்
பாயும் =உடலில் படரும்
பசலை = பசலை நிறம்
மற்று = அதே சமயம்
ஊடி = ஊடல் கொண்டு
உயன்காக்கால் = பிரிந்து (மெலிய) இருக்காவிட்டால்
உப்பு இன்றாம் காமம் = அந்த காதல் உப்பு சப்பு இல்லாமல் போய் விடும்
வயங்கு = விளங்குகின்ற
ஓதம் = பொங்கும்
நில்லா திரை = நிற்காத அலை
அலைக்கும் = அங்கும் இங்கும் அலைக்கழிக்கும்
நீள் = நீண்ட
கழித் = கடற்கரை
தண் = குளிர்ந்த
சேர்ப்ப = சேர்பனே, தலைவனே
புல்லாப் = ஊடல் கொண்டு
புலப்பதோர் ஆறு = கூடுவது ஒரு வழி


இது தோழி தலைவனுக்கு சொன்னது.

நீ ஊடல் கொண்டது எல்லாம் சரி, இது கூடும் நேரம் என்கிறாள்.
உணவுக்கு உப்பு எப்படியோ அதுபோல் காதலுக்கு ஊடல்
உப்பு கூடினாலும் குறைந்தாலும் உணவு சுவைக்காது.
அது போல, நீ ரொம்ப ஊடல் கொள்ளாமல், தலைவியை போய் சேர் என்கிறாள்.
அலை அடிக்கும் கடல் போல, என் தலைவியின் மனம் அலை பாய்கிறது என்பது குறிப்பால் உணர்த்திய ஒன்று.
.


Rethin

எழுதியவர் : (19-Jun-18, 7:59 pm)
பார்வை : 30

மேலே