வாழ்வரங்கம்

அம்மாவின் அரவணைப்பில்
அடங்கிடும் அழுகைக்குரல்
கைக்குழந்தைப்பருவத்திலே
கைவந்த நடிப்பென்பதோ ?

பள்ளிப்பருவத்தில் ஓடியாடும் உன்
பிஞ்சுகால் படும் துயரம்
மருந்தாகும் அன்னைக்கரங்கள்
மறை நீக்கி ஒளி விடும் சிரிப்பு
வெளிப்படுத்தும் உன் நடிப்பின்
விஸ்வரூபத்தின் மின்னல் தோற்றம்

இளமையின் வேகம் உன் விவேகம் புசித்த பின்
இருவிழிகள் அரங்கேற்றும் காதல் நாடகம்

காட்சி கலைந்தாலும் நாடகம் முடிந்தாலும்
கலைய மறுக்கும் உன் வாழ்க்கை வேடங்கள்
குழந்தையே செல்வம் என்கின்ற போதிலும்
காசைதிரட்டதான் கலயாமலிருப்பதோ?

மனதில் பாசம், உதட்டிலோ சாசனம்
மறைத்து வாழ்ந்திடும் பெற்றோரின் நடிப்பு

வாழ்க்கையின் விளிம்பிலே , வயதான பொழுதிலே
வம்பிற்கிழுத்திடும் செல்லப்பேரக்குழந்தைகள்
விடுமுறை முடிந்த பின் வழி அனுப்பிடும் உன்
வாழ்த்துக்களில் நீ மறைத்த சோகம்
விழித்திரை நீக்கி வழிந்ததேனோ
விழித்துளிகள் வரைந்த நாடகமோ?

எத்தனை நாட்கள் நடித்திருந்தாய் ?
ஏனிந்த வேடம் கலைத்து விட்டாய் ?
அழுகையில் நெஞ்சம் கரைந்ததாலோ ?
அழவேண்டாம் என்னும் கிளிபேச்சினிலோ ?
கண்ணீர் துடைக்கும் தாமரைக்கைகளாலோ ?
காலத்தால் நீ பெற்ற ஞானத்தாலோ ?

எழுதியவர் : சந்தியா Anand (20-Jun-18, 9:51 am)
சேர்த்தது : சந்தியா
பார்வை : 63

மேலே