வழி வரலாம் ==============

கவன மாகக் கவனிக் காத
=கருப்பு அங்கிக் காரர்
அவர்தம் பிழைப்பை நாளும்
=அவதா னித்து நடத்த
தவணை மேலே தவணைப் போட்டுத்
=தள்ளி வைக்கும் வழக்கால்
கவன மாகக் காசை மட்டும்
=கறந்தெ டுக்க மறவார்.
=
நீளு கின்ற நிலைமை கொண்ட
=நிறைய வழக்குக் கெல்லாம்
நாளு மிவர்கள் நடத்து கின்ற
=நாடக மேயுர மாகும்.
ஆளும் வர்க்கம் ஆட்டு கின்ற
=ஆட்டத் திற்கு அசைந்து
பாழுங் கிணற்றில் பிடித்துத் தள்ளப்
=படித்துக் கொள்வார் படிப்பு..
==
சட்ட மென்ற சந்து பொந்தில்
=சர்ப்பம் போல நுழைந்து
இட்டம் போல எம்மைக் கொத்தி
=ஏற்று கின்ற விசத்தால்
நட்ட முற்று நாமு மிங்கு
=நடைப்பி ணம்போல்க் கிடக்க
சட்டைப் பைக்குள் காசைப் போட்டு
=சலன மற்றே செல்வர்.
==
நாட்டைச் சுரண்டி நடக்கும் பேரை
=நன்கே காத்து. வயிற்றுப்
பாட்டுக் கில்லார் பசிக்கெ டுத்தால்
=பேசிக் கூட்டி லடைப்பர்.
மாட்டைப் போலே மாந்த ருழைத்து
=மடிந்தி ருக்கக் கண்டும்
நோட்டில் மட்டும் நாட்டம் கொண்டு
=நோட்டம் விட்டுத் திரிவார்.
==
நீதியைக் கொன்று நேர்மையைப் புதைக்க
=நித்தமும் செய்திடும் வாதம்
பாதியில் நிற்கும் பழகிய வழக்கை
=பட்டென முடிக்கா பேதம்
ஆதியில் தொடங்கி அந்தம் வரைக்கும்
=ஆட்டிப் படைக்கும் சோகம்
வாதிடு மிந்த வழக்கறி ஞர்கள்
=வகுப்ப தனால்வரும் ரோகம்
==
வழக்கினை சரியாய் வழக்கிடா தவர்க்கோர்
=வழக்கினைப் பதிவு செய்து
வழக்கிட அரசே வகைசெயு மென்றால்
=வழக்கினால் தவிப்போர் வாழ்வில்
கிழக்கென வெளுத்து கிரணமு முதிர்க்க
=கிடைத்தி டலாமொரு தீர்வு.
வழக்குகள் யாவும் விரைவினில் நீங்கும்
=வழிகளும் வரலாம் பாரீர்.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Jun-18, 2:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 88

மேலே