விழி வழி நீர்
கல்லணையும் தகர்ந்துவிடும் கண்ணீரின் வலியிலே
கொள்ளிடத்தின் காட்டாற்று வேகமும் குறையுமே...
உணர்வின் வீரியமது உடைத்துதான் கூறுமோ...
அருவியின் வழிமொழியாய் நீரும் தான் வழியுமோ...
தடுப்பதற்கோர் இன்றளவும் இல்லைதான் அணை...
இது முற்றுணர்ந்த வாழ்வின் முழு வினை...💐