முதலீடும் மூலதனமும்

மக்களின் மனங்களில்
மிகப் பெரிய எண்ணங்கள்
எல்லாம் உயர்வானவை
ஏழைக்கும் பணக்காரனுக்கும்
இயல்பாக ஆசைகள்
அவற்றை நிறைவேற்ற
தகுதிகள் ஏறத்தாழ உண்டு
தகுதியும் வசதியும்
சரித்திரத்தையே மாற்றிவிடுகின்றது

திறமையும் முயற்சியும் மட்டுமே
முதலீடும் மூலதனமும் ,
அவனவன் வாழ்க்கையில்
முன்னேற முயன்று வந்தால்
ஏற்றத்தாழ்வு இல்லை
இயலாமை எனும் சொல் தன்னாலே நீங்கும்
இறைவன் படைப்பில் ஏற்றது தாழ்வு ஏது /
அயரா உழைப்பும் முயற்சியும்
நமது முதலீடும் மூலதனமுமே

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Jun-18, 6:40 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 117

மேலே